ஹாஷிம் உமர் அறக்கட்டளையின் இப்தார் சிறப்பு நிகழ்வு (Photos)
Sri Lanka
Sri Lankan Peoples
Iftar
By Fathima
ஹாஷிம் உமர் அறக்கட்டளையினால் ஒழுங்கு செய்யப்பட்ட ரமழான் மாத இப்தார் சிறப்பு நிகழ்வு ஒன்று கொழும்பு ஷங்ரி லா ஹோட்டலில் நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வு ஹாஷிம் உமர் மன்றத்தின் ஸ்தாபகத் தலைவரும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆலோசகருமான புரவலர் ஹாஷிம் உமர் தலைமையில் இன்று (10.4.2023) இடம்பெற்றுள்ளது.
மேலும், ஹாஷிம் உமர் அறக்கட்டளை, இலங்கையில் பல்வேறு சமூக சேவைகளைச் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் ஊடகவியலாளர்கள், குறிப்பாக நிறுவனத்தின் பணிப்பாளர்கள், பத்திரிக்கை ஆசிரியர்கள், ஊடக நிருபர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டுள்ளனர்.






