நோன்பு பெருநாளை முன்னிட்டு திவிநெகும சந்தை (video)

Sri Lanka
By Navoj Apr 18, 2023 09:01 PM GMT

ஓட்டமாவடி பிரதேச செயலகமும் சமுர்த்தி திணைக்களமும் நோன்பு பெருநாளை முன்னிட்டு நடாத்திய 'சமுர்த்தி அபிமானி' விற்பனை கண்காட்சி இன்று பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.

ஓட்டமாவடி பிரதேச செயலக சமுர்த்தி தலைமை முகாமையாளர் எம்.ஐ.ஏ.அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.புவேனேந்திரன், ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வி.தவராஜா ஆகியோர் கலந்து கொண்டதுடன் அதிதிகளாக ஓட்டமாவடி பிரதேச சபையின் விஷேட ஆணையாளர் எஸ்.எம்.சிஹாப்தீன், சமுர்த்தி திணைக்களத்தின் மாவட்ட செயலக கணக்காளர் எம்.எஸ்.பஸீர், பிரதேச செயலக சமுர்த்தி வங்கி முகாமையாளர் பி.எம்.சிஹான், கருத்திட்ட முகாமையாளர் என்.விஜிதன் கலந்து கொண்டதுடன் அதிதிகளாக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுதாய அடிப்படை அமைப்புக்களின் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான கொடுப்பனவு ஆரம்ப கட்டமாக நாற்பத்தையாயிரம் ரூபா வீதம் 186 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டதுடன் 'சமுர்த்தி அபிமானி' விற்பனை கண்காட்சியும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

விற்பனை கண்காட்சி இன்றும் நாளையும் இடம் பெறும் என்று சமுர்த்தி தலைமை முகாமையாளர் எம்.ஐ.ஏ.அஸீஸ் தெரிவித்துள்ளார்.


GalleryGalleryGallery