கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட இப்தார் நிகழ்வுகள்
அம்மாறையில் முன்னெடுக்கப்பட்ட இப்தார் நிகழ்வு
மனித மேம்பாட்டு அமைப்பு ஸ்ரீ லங்கா மற்றும் வை.எம்.எம்.ஏ. மாவடிப்பள்ளி கிளையினால் ஏற்பாட்டில் வருடாந்த இப்தார் நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அமைப்பின் பணிப்பாளர் எஸ்.ஏ. முஹம்மட் அஸ்லம் தலைமையில் அமைப்பின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று(27) குறித்த இப்தார் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இப்தார் நிகழ்வு
மேலும், இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் ஐ.எல்.எம்.இர்பான், தேசிய மாணவர் சிப்பாய்கள் படையணியின் 17ஆவது படைப்பிரிவின் பயிற்சி அதிகாரி எம்.டி.நௌஷாட், அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் அம்பாறை மாவட்ட பணிப்பாளர் எம்.ஐ.எம். றியாஸ் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
கிண்ணியா பிரதேச சபையால் முன்னெடுக்கப்பட்ட இப்தார்
கிண்ணியா பிரதேச சபையினால் இப்தார் நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த இப்தார் நிகழ்வானது நேற்று (26) பிரதேச சபையின் மாநாட்டு மண்டபத்தில் அதன் செயலாளர் எஸ்.அஸ்வத்கான் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இப்தார் நிகழ்வு
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர பிரதம அதிதியாகவும், வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா கௌரவ அதிதியாகவும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன விசேட அதிதியாகவும், கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் இஸட்.ஏ.எம்.பைசல், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி, பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


