திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இப்தார் நிகழ்வு

Ramadan Trincomalee Sri Lankan Peoples Iftar
By H. A. Roshan 7 days ago
H. A. Roshan

H. A. Roshan

திருகோணமலை(Trincomalee) மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில், மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம்.ஹேமந்த குமார தலைமையில், இப்தார் நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த இப்தார் நிகழ்வு நேற்று (26) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

பணவீக்கம் குறித்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

பணவீக்கம் குறித்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

இப்தார் நிகழ்வு

இதன்போது, நோன்பின் விஞ்ஞான ரீதியான விளக்கம், நோன்பின் மகத்துவம் மற்றும் சிறப்புத்தன்மை பற்றி எடுத்து கூறப்பட்டதுடன், ஸம்ஸம் கிணறு பற்றிய ஆச்சரியமான தகவல்கள் காணொளி மூலமாக காண்பிக்கப்பட்டுள்ளது.  

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இப்தார் நிகழ்வு | Iftar Event At Trincomalee District Secretariat

அத்தோடு, பாடல் மற்றும் நாடக நிகழ்வுகளும் மேடையை அலங்கரித்துள்ளன. இதில் கலந்து கொண்டு தமது திறமையை வெளிப்படுத்தியவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், மாவட்ட செயலக பதவிநிலை அதிகாரிகள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரு மீனவ சமூகங்களுக்கிடையில் மத ஒற்றுமை : இப்தார் நிகழ்ச்சி

இரு மீனவ சமூகங்களுக்கிடையில் மத ஒற்றுமை : இப்தார் நிகழ்ச்சி

திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவி தெரிவு

திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவி தெரிவு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGallery