சாய்ந்தமருது பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை
சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு பிரதேச செயலக நலன்புரி அமைப்பின் நெறிப்படுத்தல் மற்றும் ஒழுங்குபடுத்தலில் முன்னெடுக்கப்பட்டது.
நேற்று(19) பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் தலைமையில் லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ரமழான் சிந்தனையை சாய்ந்தமருது மஸ்ஜிதுல் ஷபா பள்ளிவாசல் பேஷ் இமாம் எம்.எச்.எப்.எம்.றஹ்மதுல்லா மெளலவி நிகழ்த்தினார்.
இப்தார் நிகழ்வு
அதனை தொடர்ந்து சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தராக கடமையாற்றி 2025.02.10 ஆம் திகதி வபாத்தான மர்ஹூம் எம்.எஸ்.எம்.அஸ்வரின் மறுமை வாழ்வின் ஈடேற்றத்திற்காக துவா பிராத்தினையும் இடம் பெற்றது.
அத்தோடு இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவருமான ஏ.ஆதம்பாவா, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம, அம்பாறை மாவட்ட பிரதம கணக்காளர் ஏ.எம்.எம்.மஹ்ரூப் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |






