வரலாற்றில் முதல் முறையாக இலங்கையின் பாதுகாப்பு பல்கலைக்கழகதில் இப்தார் நிகழ்வு

Colombo Iftar
By Fathima Apr 01, 2023 04:14 PM GMT
Fathima

Fathima

வரலாற்றில் முதல் முறையாக ஜேனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகதில் முப்படை வீரர்கள் மற்றும் இளமானி பட்டக்கலை மாணவர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இப்தார் நிகழ்வுகள் ஜேனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக (KDU) "இப்தார் 2023" நிகழ்வு கடந்த 2023 மார்ச் 28 அன்று KDU உணவு விடுதியில் வரலாற்றில் முதல் முறையாக நடைபெற்றது.

இந்த இப்தார் நிகழ்வானது அண்மைக் காலத்தில் KDU இல் ஏற்பாடு செய்யப்பட்ட சகல மத மாணவர்களும் ஒரே இடத்தில் நோன்பு திறந்த ஒரு வரலாற்று முக்கிய நிகழ்வாகும்.

இப்தார் என்பது ஒரு முஸ்லீம் பாரம்பரியமாகும், இது சகல மனிதகுலத்தினர் மத்தியில் பசி பட்டினியின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறும் அமல்களில் ஒன்றாகும் இதன் மூலம் ஏழை மக்களின் பசியை உணர்ந்து செல்வம் படைத்தவர்கள் தர்மங்களை வாரி வழங்கும் மாதமாகும்.

எனவே, இப்தார் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் உப வேந்தர், மேஜர் ஜெனரல் எம்.பி. பீரிஸ் RWP RSP VSV USP ndc psc MPhil, பிரதம அதிதியாக இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

வரலாற்றில் முதல் முறையாக இலங்கையின் பாதுகாப்பு பல்கலைக்கழகதில் இப்தார் நிகழ்வு | Iftar Event

இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக மெளலவி அல்ஹாஜ் எம் ஃபாஸில் பாரூக் (Senior Executive Member of the ACJU) கலந்து கொண்டு நோன்பின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார்.

பிரதி உபவேந்தர் (பாதுகாப்பு மற்றும் நிர்வாகம்), பிரிகேடியர் DCA விக்கிரமசிங்க USP USACGSC, பிரதி உபவேந்தர் (கல்வி), பேராசிரியர் KAS தம்மிக்க, பீடாதிபதிகள், நிகழ்வின் அனுசரணையாளர்கள் மற்றும் பணிப்பாளர்கள் மற்றும் சகல மதத்தையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் 300 மேற்பட்ட மாணவர்களும் இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

வரலாற்றில் முதல் முறையாக இலங்கையின் பாதுகாப்பு பல்கலைக்கழகதில் இப்தார் நிகழ்வு | Iftar Event 

வரலாற்றில் முதல் முறையாக இலங்கையின் பாதுகாப்பு பல்கலைக்கழகதில் இப்தார் நிகழ்வு | Iftar Event 

வரலாற்றில் முதல் முறையாக இலங்கையின் பாதுகாப்பு பல்கலைக்கழகதில் இப்தார் நிகழ்வு | Iftar Event