திருகோணமலை ஊடகவியலாளர்களால் முன்னெடுக்கப்பட்ட இப்தார் நிகழ்வு
திருகோணமலை(Trincomalee) மாவட்ட கங்கதலாவ ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தினால், ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த நல்லிணக்க இப்தார் நிகழ்வு நேற்று(23) கிண்ணியாவில் இடம்பெற்றது.
கடந்த மூன்று வருடங்களாக, திருகோணமலை மாவட்டத்தில் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பொருட்டு வெவ்வேறு பிரதேசங்களில் இவ்வாறான இப்தார் நிகழ்வை, ஊடக ஒன்றியம் முன்னெடுத்து வருகின்றது.
இப்தார் நிகழ்வு
மேலும், இந்த நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்தினசேகர பிரதம அதிதியாகவும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் H.W.G.ஹேமந்தகுமார சிறப்பு அதிதியாகவும் கலந்து கொண்டுள்ளார்.
இதன்போது, ஆளுநர் கருத்து தெரிவிக்கையில்,
இஸ்லாமிய புனித நோன்பு 1400 ஆண்டுகளுக்கு முன்னரே திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.
நோன்பில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. நோன்பு ஏழைகளின் பசியை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.
மேலும் இந்தக் கருத்துக்கள் இஸ்லாமிய நோன்பின் முக்கியத்துவத்தையும், அதன் சமூக மற்றும் மருத்துவப் பயனையும் எடுத்துக்காட்டுகிறது என்று கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


