இலங்கை நாடாளுமன்றத்தை கருத்திற்கொள்ளாத சர்வதேச கிரிக்கெட் பேரவை
இலங்கையின் நாடாளுமன்ற விடயங்களை சர்வதேச கிரிக்கெட் பேரவை கருத்திற்கொள்ளவில்லை என விளையாட்டு துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு நாடாளுமன்றத்தில் இன்று (13.12.2023) பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
ஊழல் செய்யும் அதிகாரிகள்
“நாடாளுமன்றம் அங்கீகரித்துள்ள கிரிக்கெட் தொடர்பான தீர்மானங்கள் ஆச்சரியத்தை அளிக்கின்றது என எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், நாடாளுமன்றத்தில் கிரிக்கெட் தொடர்பில் விவாதிப்பதில் எந்தவொரு அர்த்தமுமில்லை என்ற உண்மை எதிர்க்கட்சி தலைவர் உட்பட சிலருக்கு புரிவதில்லை.
இலங்கை கிரிக்கெட் சபையின் அதிகாரிகளை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்திற்கு நாங்கள் ஒப்புதல் அளித்துள்ளோம்.
மேலும், இலங்கை கிரிக்கெட்டில் ஊழல் செய்யும் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் பணியையும் சட்டமா அதிபரிடம் ஒப்படைத்துள்ளோம்” என தெரிவித்தார்.