ஜனாதிபதி தீர்மானம் பாராட்டுக்குரியது: ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான்

Ranil Wickremesinghe Sri Lanka
By Harrish Aug 28, 2024 10:14 PM GMT
Harrish

Harrish

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோவிட் தொற்று உள்ளதாக கூறி தகனம் செய்யப்பட்ட ஜனாஸாக்களுக்கு நீதியை நிலைநாட்டி அவர்களின் குடும்பத்தினருக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுக்கும் விதமாக அனைத்து தரப்பினரையும் கொண்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமிப்பதாக தெரிவித்த கருத்தை வரவேற்கத்தக்கது என கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மற்றும் செயலாளருக்கு எதிராக தடை உத்தரவு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மற்றும் செயலாளருக்கு எதிராக தடை உத்தரவு

ஜனாதிபதியின் தீர்மானம்

அவரது ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

“கடந்த கோவிட் தொற்று பரவலின் போது மரணித்த முஸ்லிம்கள் மற்றும் ஏனைய மதத்தினரின் உடல்களை தகனம் செய்வதற்கு அரசாங்கத்திற்கு பரிந்துரைத்த தரப்பினரின் பொறுப்புக்கூறல் தொடர்பில் ஆராய்வதற்காக ஏனைய கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்து நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முஸ்லிங்களின் உயரிய மரியாதைக்குரிய உலமா சபையினரிடம் தெரிவிதுள்ள இந்த உறுதிமொழியானது வரவேற்கத்தக்கது.

மேலும், கோவிட் தொற்றுள்ளதாக கூறி தகனம் செய்யப்பட்ட ஜனாஸாக்களுக்கு நீதியை நிலைநாட்டுவது தொடர்பில் ஆணைக்குழு மற்றும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றை அமைக்க கோரி ஜனாதிபதி மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நான் அனுப்பிய கடிதத்தின் பதிலை இலங்கை முஸ்லிம்களின் உயர் சபையான அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் முன்னிலையில் உறுதியளித்துள்ளமையானது தகனம் செய்யப்பட்ட ஜனாஸாக்களின் குடும்பங்களுக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட மரியாதையாக கருதுகின்றேன்.

ஜனாதிபதி தீர்மானம் பாராட்டுக்குரியது: ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் | I A Khalilur Rahman Speech About Ranil

தேர்தலுக்கு முன் நாடாளுமன்றம் கூடும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி இந்த தெரிவுக்குழுவை நியமிப்பதன் மூலம் கோவிட் தகனம் தொடர்பாக அரசியல் மேடைகளில் முதலைக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் அரசியல் தலைவர்களின் வாயில் பூட்டு போட்டு அடைக்க முடியும்.

முஸ்லிம் அரசியல் தலைவர்கள் நாடாளுமன்றத்தில் இருந்து கொண்டு, கோவிட் தொற்றுள்ளதாக கூறி தகனம் செய்யப்பட்ட ஜனாஸாக்களை வைத்து பிச்சைகாரனின் காயம் போல், அதனை வைத்து மட்டமான அரசியலை செய்தார்களே ஒழியே அர்த்தமுள்ள முறையில் கோவிட் தொற்றுள்ளதாக கூறி தகனம் செய்யப்பட்ட ஜனாஸாக்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்கும் வகையில் தெரிவுக்குழுவை கூட கோராமல் தமது கீழ்தரமான அரசியல் லாபங்களுக்காக ஜனாஸா எரிப்பை பயன்படுத்திக் கொண்டிருப்பதை இட்டு வருத்தமடைகிறேன்.

ஜனாதிபதி தீர்மானம் பாராட்டுக்குரியது: ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் | I A Khalilur Rahman Speech About Ranil

எனவே, எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் கோவிட் தொற்றில் சடலங்களை தகனம் செய்வது தொடர்பில் தேர்வு குழுவொன்றை நியமிப்பதற்கு கட்சி, எதிர்க்கட்சி வேறுபாடுகளை விடுத்து இந்நாட்டிலுள்ள முஸ்லிம் சமூகத்திற்கு நீதி வழங்குமாறு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர்களிடமும் முஸ்லிம் சமூகம் சார்பில் கோரிக்கை விடுக்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபைக்கும் இடையே சந்திப்பு

ஜனாதிபதிக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபைக்கும் இடையே சந்திப்பு

முஸ்லிம் காங்கிரஸில் இடைநிறுத்தப்பட்ட மௌலானா எம்.பி: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

முஸ்லிம் காங்கிரஸில் இடைநிறுத்தப்பட்ட மௌலானா எம்.பி: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு