கொழும்பின் முக்கிய பகுதியில் மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிப்பு

Sri Lanka Police Colombo Sri Lanka
By Shalini Balachandran Jul 16, 2024 07:41 AM GMT

கொழும்பு (Colombo) - கோட்டையில் உள்ள பழைய அரச செயலகம் ஓன்றின் அருகில் மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பு துறைமுக நகர நெடுஞ்சாலையுடன் இணைக்கப்பட்ட நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கைகளின் போது இந்த எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நிர்மாண நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களால் கிட்டத்தட்ட ஆறு அடிக்கு கீழே எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நிர்மாணப் பணி

எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து நிர்மாணப் பணி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டதுடன்  இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் அந்த இடத்திற்கு பொலிஸார் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பின் முக்கிய பகுதியில் மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிப்பு | Human Skeleton Found In The Main Part Of Colombo

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் கொழும்பு துறைமுக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW