நிந்தவூரில் கரையொதுங்கிய பாரிய தண்ணீர் தாங்கி

Ampara Sri Lankan Peoples Eastern Province Nintavur
By Rakshana MA Feb 27, 2025 06:16 AM GMT
Rakshana MA

Rakshana MA

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை பகுதியில் பாரிய தண்ணீர் தாங்கி ஒன்று நேற்று(26) மாலை கரை ஒதுங்கியுள்ளது.

இது கடலில் நிலவும் சீரற்ற காலநிலையால், கடும் காற்றில் சிக்கி கரையொதுங்கி இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தண்ணீர் தாங்கி கரையொதுங்கியதையடுத்து, கடற்படை அதிகாரிகளுக்கு இது தொடர்பில் தகவல் தெரிவிக்கப்பட்டதாக அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்மாந்துறையில் உணவகங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

சம்மாந்துறையில் உணவகங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

கரையொதுங்கிய தண்ணீர் தாங்கி 

இந்நிலையில், இந்த பாரிய தண்ணீர் தாங்கியானது, இரும்பு உலோகத்தில் செய்யப்பட்டு அதன்மேல் பைரினால் வார்க்கப்பட்டு, இளம் பச்சைக் வர்ண கூம்பக வடிவில் அடைக்கப்பட்டதாகவும், இப்பொருளின் மேற்பகுதியில் டயர்கள் காணப்படுகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இது பெரிய கப்பல்களின் ஒரு பாகமாக இருக்கலாம் என அப்பகுதி கடற்றொழிலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நிந்தவூரில் கரையொதுங்கிய பாரிய தண்ணீர் தாங்கி | Huge Water Tanker Floating In The Sea Rescued

கரை ஒதுங்கிய மிதவையை இராணுவம், கடற்படை, பொது மக்கள் என பலர் பார்வையிட்டு வருகின்றதுடன், இது தொடர்பாக விசாரணைகளை கடற்படையினரும் பொலிஸாரும்  மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை கடந்த சில வாரங்களாக கிழக்கு மாகாண கடற்கரை பகுதிகளில் மர்மான பொருட்கள் மற்றும் ஆளில்லாத படகுகள், டொல்பீன்கள் போன்றவை கரை ஒதுங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது 

கல்முனையில் உள்ள உணவகங்களில் திடீர் சோதனை

கல்முனையில் உள்ள உணவகங்களில் திடீர் சோதனை

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சுகாதார மேம்பாட்டு கருத்தரங்கு

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சுகாதார மேம்பாட்டு கருத்தரங்கு

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGalleryGallery