புத்தளத்தில் பெருந்தொகையான மஞ்சள் மீட்பு

Puttalam Sri Lanka Navy Crime
By Laksi Sep 11, 2024 09:19 AM GMT
Laksi

Laksi

புத்தளம் - சேரக்குளி கடற்பிரதேசத்தில் இருந்து ஒருதொகை மஞ்சள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த கடற்பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியில் நேற்று (10) கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 14 உர மூடைகளில் இருந்து 470 கிலோ கிராம் மஞ்சள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, மீட்கப்பட்ட உர மூடைகளில் உலர்ந்த மஞ்சள் இருந்தமை தெரியவந்துள்ளது.

ரிஷாட்டுடன் இணைந்து சஜித்தின் வெற்றியை உறுதி செய்வோம்: மன்னார் மாவட்ட உறுப்பினர்கள் தெரிவிப்பு

ரிஷாட்டுடன் இணைந்து சஜித்தின் வெற்றியை உறுதி செய்வோம்: மன்னார் மாவட்ட உறுப்பினர்கள் தெரிவிப்பு

மேலதிக விசாரணை

குறித்த மஞ்சள் இந்தியாவில் இருந்து கடல்மார்க்கமாக இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் விற்பனை செய்யும் நோக்கில் இவ்வாறு எடுத்து வந்திருக்கலாம் எனவும் கடற்படையின் கெடுபிடிகள் காரணமாக சந்தேக நபர்கள் மஞ்சள் அடங்கிய உரமூடைகளை காட்டுப் பகுதியில் கைவிட்டுச் சென்றிருக்கலாம் எனவும் தாம் சந்தேகிப்பதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.

புத்தளத்தில் பெருந்தொகையான மஞ்சள் மீட்பு | Huge Amount Of Turmeric Recovery In Puttalam

மேலும், இவ்வாறு கைப்பற்றப்பட்ட 470 கிலோ கிராம் மஞ்சள் அடைக்கப்பட்ட உரமூடைகளை மேலதிக விசாரணைக்காக தமது பொறுப்பில் வைத்திருப்பதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோத தேர்தல் சுவரொட்டிகள் அழிப்பு: நிஹால் தல்துவ சுட்டிக்காட்டு

சட்டவிரோத தேர்தல் சுவரொட்டிகள் அழிப்பு: நிஹால் தல்துவ சுட்டிக்காட்டு

சஜித் பிரேமதாசவை ஆதரித்து இறக்காமம் பிரதேசத்தில் ஜனாதிபதி தேர்தல் காரியாலயம்!

சஜித் பிரேமதாசவை ஆதரித்து இறக்காமம் பிரதேசத்தில் ஜனாதிபதி தேர்தல் காரியாலயம்!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW