கையடக்கத் தொலைபேசி கொள்வனவு தொடர்பில் விசேட அறிவிப்பு

Government Of Sri Lanka
By Dharu Dec 27, 2023 07:42 AM GMT
Dharu

Dharu

கையடக்கத் தொலைபேசி கொள்வனவு தொடர்பில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

 இதன்படி கையடக்கத் தொலைபேசியை கொள்வனவுசெய்யும் போது, ​​குறித்த தொலைபேசி, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பதிவு செய்யப்பட்ட தொலைபேசியா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என அதன் இணக்கப் பணிப்பாளர் மேனகா பத்திரன தெரிவித்துள்ளார்.

குறுஞ்செய்தி அனுப்பும் முறை

குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் இதனை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என மேனகா பத்திரன விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, IMEI என டைப் செய்து இடைவெளி விட்டு, 15 இலக்க IMEI எண்ணை டைப் செய்து அதன் நம்பகத்தன்மையை சரிபார்க்க ஏதேனும் கையடக்க தொலைபேசி வலையமமைப்பின் மூலம் 1909 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த கையடக்க தொலைபேசி பதிவு செய்யப்பட்டதா? இல்லையா? என்பது தொடர்பில் குறுஞ்செய்தி மூலம் தகவல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.