உள்ளூராட்சித் தேர்தலில் வாக்களிக்கும் முறை
எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பது எப்படி என்பது குறித்த விளக்கத்துடன் தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
ஒரு வாக்காளருக்கு ஒரு வாக்கு மாத்திரம் உரித்தாகும். அதாவது ஒரு வாக்காளருக்கு ஒரு வாக்குச் சீட்டு மாத்திரமே விநியோகிக்கப்படும்.
வாக்களிக்கும் முறை
அத்துடன் குறித்த தேர்தலின் போது வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படும் வாக்குச்சீட்டில் போட்டியிடுகின்ற கட்சிகளின் பெயர்களும் சின்னங்களும் சுயேச்சைக்குழுக்கள் போட்டியிடுவதாயின் குறித்த குழுவின் சொற்றொடருடன் அடையாளம் காட்டும் இலக்கம் மற்றும் சின்னம் மாத்திரமே அச்சிடப்பட்டிருக்கும்.
வேட்பாளர்களின் அல்லது வட்டாரங்களின் பெயர்கள் அல்லது இலக்கங்கள் அதில் குறிப்பிடப்படமாட்டாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

