இடிந்து விழுந்த மாத்தளை மொரகஹகந்த லக்கல பாலம்
Matale
Sri Lanka
Sri Lankan Peoples
By Fathima
வெள்ளத்தின் வேகம் காரணமாக, மாத்தளை மொரகஹகந்த லக்கல பாலம் இடிந்து விழுந்துள்ளது.
இதன்போது முச்சக்கர வண்டிகள், பேருந்துகள் மற்றும் கார்கள் உள்ளிட்ட வாகனங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடும் வெள்ளம்
நாட்டில் தற்போது நிலை கொண்டுள்ள டிட்வா புயல் காரணமாக பல்வேறு அனர்த்தங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், கடும் வெள்ளத்தின் காரணமாக மாத்தளை மொரகஹகந்த லக்கல பாலம் இடிந்து விழுந்துள்ளது.
இதனால் குறித்த பாதையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், அப்பகுதியில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.