உடல் பருமன் விகிதம் வேகமாக அதிகரிப்பு

World Health Day Ministry of Health Sri Lanka Healthy Food Recipes National Health Service Office of Public Health
By Mayuri Jul 31, 2024 07:50 AM GMT
Mayuri

Mayuri

நாட்டில் பெண்கள் மற்றும் ஆண்கள் மத்தியில் அதிக எடை மற்றும் உடல் பருமன் விகிதம் வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் பாலித மகிபால தெரிவித்துள்ளார்.

மருத்துவ முகாம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அதிக எடை

அவர் மேலும் கூறுகையில், நாட்டில் சுமார் 48 சதவீத பெண்கள் அதிக எடையுடன் இருப்பதாகவும், குறைந்தது 33.3 சதவீத ஆண்கள் தங்கள் ஆரோக்கியமான எடையை விட அதிக எடையுடன் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்திய சஜித்

ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்திய சஜித்

உடல் பருமன் விகிதம் வேகமாக அதிகரிப்பு | How Exercise And Healthy Food Helping Body Weight

உடற்பயிற்சியின்மை மற்றும் ஆரோக்கியமான உணவுகளில் கவனம் செலுத்தாமையே இதற்கு காரணம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்க்கரை, கொழுப்பு மற்றும் உப்பு அதிகமாக உட்கொள்ளும் போது உடற்பயிற்சி செய்யும் அளவில் கவனம் செலுத்த வேண்டும்.

அத்தியாவசிய காய்கறிகள் மற்றும் பழங்கள் உட்கொள்ளல்

இதேவேளை அத்தியாவசிய காய்கறிகள் மற்றும் பழங்கள் உட்கொள்ளல் குறைந்துள்ளது.

சமுதாயத்தில் பெரும்பாலான மக்கள் தங்கள் நோய்களைப் பற்றி அறிந்திருக்கமாட்டார்கள்.

வவுனியாவில் 60 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

வவுனியாவில் 60 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

உடல் பருமன் விகிதம் வேகமாக அதிகரிப்பு | How Exercise And Healthy Food Helping Body Weight

அதிக எண்ணிக்கையிலான மக்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர் எனவும் நாட்டின் முதியவர்களில் 42% பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் கூறியுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW