நாட்டின் காலநிலை தொடர்பில் விசேட அறிவிப்பு
நாட்டில் தற்பொழுது நிலவி வரும் வறட்சியான காலநிலை எதிர்வரும் மார்ச் மாத இறுதி வரையில் நீடிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை ஆய்வாளர் ஜனக குமார தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், இந்த மாதம் 16ம் திகதி வரையில் கிழக்கு, ஊவா, வடக்கு, தெற்கு, வட மத்திய மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா, பொலனறுவை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக் கூடும் என எதிர்வுகூறியுள்ளார்.
மேலும் மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் மாத்தறை, காலி மாவட்டங்களிலும் மாலை வேளையில் சிறிதளவு மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் அதி கூடிய வெப்பநிலையாக கட்டுநாயக்கவில் 35.5 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இதேவேளை, அதிகளவு வெப்பநிலை தொடர்பில் மருத்துவர்கள் அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.