கல்முனை சாஹிராவில் கௌரவப்படுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
Ampara
Sri Lanka Politician
Sri Lankan Peoples
Eastern Province
By Rakshana MA
அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் அபிவிருத்தி குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.ஆதம்பாவாவிற்கு(Aathambawa) கௌரவிப்பு நிகழ்வொன்று கல்முனையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அவரது தாய்ப்பாடசாலையான கல்முனை கமு/கமு/சாஹிரா தேசிய பாடசாலையில் நேற்றையதினம்(15) இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
கல்லூரியின் முதல்வர் எம்.ஐ.ஜாபீர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா பாடசாலை சமூகத்தினரால் பொன்னாடை போற்றி நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
கௌரவிக்கும் நிகழ்வு
மேலும் இந்நிகழ்வில், பாடசாலையின் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மற்றும் கல்வி சாரா உத்யோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |











