கல்முனையில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் பாராட்டி கௌரவிப்பு
அண்மையில் வெளியான க.பொ.த உயர்தர (2024) பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்று பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளார்கள்.
இது கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரி அதிபர் அருட். ச. இ.ரெஜினோல்ட் தலைமையில் நேற்று(30) இடம்பெற்றுள்ளது.
மாணவர்களின் சாதனை
இந்நிகழ்வில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் மாணவத்தலைவர்களால் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டார்கள்.
இந்நிலையில், அதிபர், பிரதி அதிபர்கள், உப அதிபர்கள், பகுதித்தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்கள்.
இதேவேளை, மாணவர்கள் அவர்களின் அனுபவப் பகிர்வினை கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டனர்.
மேலும், குறித்த இந்த வெற்றிக்கு பக்கபலமாக நின்ற அனைவருக்கும் பாடசாலைச் சமூகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம் என பாடசாலை சமூகம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |







