உயர்தர பரீட்சாத்திகளுக்கு வெளியான அறிவிப்பு!
கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை (2025)க்கான வீட்டுப் பொருளாதாரம் பாடம் தொடர்பான செயன்முறை பரீட்சை தொடர்பான சிறப்பு அறிவிப்பை இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அறிவிப்பின்படி, தொடர்புடைய செயன்முறை பரீட்சை 2026 ஜனவரி 24ஆம் திகதி முதல் 2026 பிப்ரவரி 02ஆம் திகதி வரை நாடு முழுவதும் நிறுவப்படவுள்ள 42 பரீட்சை மையங்களில் இடம்பெறவுள்ளன.
அனுமதி பத்திரங்கள்
பாடசாலை விண்ணப்பதாரர்களின் அனுமதி பத்திரங்கள் சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் முதல்வர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், தனியார் விண்ணப்பதாரர்களின் அனுமதி பத்திரங்கள் அவர்களின் விண்ணப்பங்களில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தபால் மூலம் அனுமதி பத்திரங்களை பெறாத விண்ணப்பதாரர்கள், 2026 ஜனவரி 19 முதல் இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்யத் தேவையான வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பரீட்சை தொடர்பான மேலதிக தகவல்களுக்கு, இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் பின்வரும் தொடர்பு ஊடகங்கள் மூலம் விசாரணைகளை மேற்கொள்ளலாம் என்றும் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஹாட்லைன்: 1911
தொலைபேசி: 011 2784208 / 011 2784537
மின்னஞ்சல்: gcealexam@gmail.com