நாட்டிலுள்ள இளைஞர்களிடையே அதிகரிக்கும் நோய் நிலைமை
Sri Lanka
Ministry of Health Sri Lanka
HIV Symptoms
By Laksi
4 days ago

Laksi
நாட்டிலுள்ள இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு பிரிவு இது தொடர்பில் வெளியிட்டுள்ள தகவலில், கடந்த வருடத்தில் 15 முதல் 24 வயதுக்கு இடைப்பட்ட 115 பேருக்கு எச்.ஐ.வி தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பரிசோதனை
கடந்த வருடத்தில் மாத்திரம் நாட்டில் 824 பேருக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களில் 718 பேர் ஆண்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வருடத்தில் 47 பேர் எய்ட்ஸ் தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தனர்.
இலங்கையில் எச்.ஐ.வி பரவல் அதிகரித்து வருவதனால், உடனடியாக பரிசோதனை செய்துக் கொள்ளுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |