ஹிருணிகாவின் பிணை மனு குறித்து நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Colombo Hirunika Premachandra Law and Order
By Rukshy Jul 04, 2024 07:40 AM GMT
Rukshy

Rukshy

மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை பிணையில் விடுவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு ஆட்சேபனைகளை தாக்கல் செய்யவுள்ளதாக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

குறித்த அறிவிப்பை இன்று (04.07.2024) வெளியிட்டுள்ளதுடன் இந்த பிணை கோரிக்கை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.

ஆட்சேபனைகள்

அங்கு, குறித்த கோரிக்கை தொடர்பில் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க சட்டமா அதிபர் எதிர்பார்ப்பதாக தெரிவித்த அரசாங்க சட்டத்தரணி, எழுத்து மூலம் ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதினை ஒத்திவைக்குமாறு கோரினார்.

ஹிருணிகாவின் பிணை மனு குறித்து நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Hirunika S Bail Order Issued Court

இதன்படி, சட்டமா அதிபருக்கு ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க அனுமதித்த உயர் நீதிமன்ற நீதிபதி, பிணை கோரிக்கையை எதிர்வரும் 11ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW