கல்முனையில் இடம்பெற்ற இஸ்லாமிய புதுவருட விஷேட நிகழ்வு

Ampara Eastern Province Kalmunai
By Aadhithya Jul 12, 2024 09:27 AM GMT
Aadhithya

Aadhithya

கல்முனையில் இஸ்லாமிய புதுவருடம் தினத்தை (முஹர்ரம்) முன்னிட்டு ஹிஜ்ரி 1446 முஹர்ரம் தொடர்பான விஷேட நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வானது, கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலய அதிபர் எம். எச். எஸ். ஆர். மஜீதிய்யா தலைமையில்  இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லுலூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் அன்ஸார் பழீல் மௌலானா சிறப்புரை ஆற்றினார்.

நிகழ்வின் சிறப்புக்கள்

அந்தவகையில், மாணவர்கள் மத்தியில் ஆற்றப்பட்ட இச்சிறப்புரையில் புதிய மாற்றங்களுக்கு முஸ்லிம் சமூகம்' எவ்வாறு முகங்கொடுப்பது தொடர்பிலும், முஹர்ரம் நிகழ்வின் சிறப்புக்கள், மாணவர்கள் பேணும் விழுமியங்கள், ஒற்றுமை,சமூக இணக்கப்பாடு உள்ளடங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

கல்முனையில் இடம்பெற்ற இஸ்லாமிய புதுவருட விஷேட நிகழ்வு | Hijri 1446 Muharram Event At Kalmunai School

நிகழ்வின் இறுதியில் பாடசாலையின் ஆசிரியை சுசான் பாயிஸினால் வழங்கப்பட்ட இனிப்பும் பிரதம அதிதியால் சகல மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் உதவி அதிபர் எம். ஏ. பாதிம் மிஸ்னா, ஆசிரியைகள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
GalleryGalleryGalleryGalleryGallery