தேர்தலில் செலவிடக்கூடிய உச்ச வரம்புத்தொகை - வெளியாகவுள்ள அறிவிப்பு

Election Commission of Sri Lanka Sri Lankan political crisis Economy of Sri Lanka Money Election
By Mayuri Jul 28, 2024 04:22 AM GMT
Mayuri

Mayuri

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் செலவு செய்யக்கூடிய உச்ச வரம்புத் தொகை குறித்து அறிவிக்கப்பட உள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் பூர்த்தியானதன் பின்னர் இந்த உச்ச வரம்புத்தொகை அறிவிக்கப்பட உள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வேட்பு மனுத்தாக்கல் செய்த அனைத்து வேட்பாளர்களுடனும் சந்திப்பு நடத்தப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உச்சவரம்புத் தொகை

வேட்பாளர்களுடன் கலந்தாலோசனை செய்து தேர்தலில் வேட்பாளர் ஒருவர் செலவிடக்கூடிய உச்சவரம்புத் தொகை நிர்ணயிக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளார்.

தேர்தலில் செலவிடக்கூடிய உச்ச வரம்புத்தொகை - வெளியாகவுள்ள அறிவிப்பு | Highest Expenditure Amount For Candidates

தேர்தல் செலவுகள் சட்டத்தின் பிரகாரம் நிர்ணயம் செய்யப்படும் உச்ச வரம்புத் தொகையை விடவும் கூடுதல் அளவில் செலவு செய்ய எந்தவொரு வேட்பாளருக்கும் அனுமதி வழங்கப்படாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் செலவிடக்கூடிய உச்ச வரம்புத் தொகை நிர்ணயம் செய்யப்பட்டதன் பின்னர் அதனை விடவும் கூடுதல் தொகையை வேட்பாளர் ஒருவர் செலவிட்டால் அது குறித்து பொதுமக்களோ அல்லது கண்காணிப்பு அமைப்புக்களோ தேர்தல் ஆணைக்குழவிடம் முறைப்பாடு செய்ய முடியும் என கூறியுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW