இலங்கையிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தொர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

Sri Lanka Sri Lankan Peoples Blood Pressure
By Rakshana MA Apr 06, 2025 08:36 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்ட மக்களில் 35%க்கும் அதிகமானோர் உயர் இரத்த அழுத்தம் (High Blood Pressure) காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் கூறியுள்ளதாவது,

இந்த நிலைமை பற்றிய போதுமான விழிப்புணர்வு இல்லாததால், ஆண்டுதோறும் சுமார் 60,000 பேர் பக்கவாதம் (stroke) போன்ற பிரச்சனைகளுக்கு உள்ளாகுகிறார்கள்.

முட்டையின் விலை மீண்டும் அதிகரிப்பு

முட்டையின் விலை மீண்டும் அதிகரிப்பு

60 வயதுக்கு மேற்பட்டவர்கள்

இதன் விளைவாக, ஆண்டுதோறும் சுமார் 4,000 பேர் உயிரிழக்கவோ, அல்லது முழுமையான உடல் ஊனமுற்ற நிலையிலேயே வாழ வேண்டிய நிலைக்குச் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தொர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் | High Bp Risk For Above Age 60 In Sri Lanka

இதற்கிடையில் நாட்டின் முதியவர்கள் மத்தியில் 20 வீதமானவர்கள் நீரிழிவு நோயால் (Diabetes) பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 41% வீதமானவர்கள் முறையான சிகிச்சை பெறாமல் இருப்பதாக தெரியவந்துள்ளது.

மேலும், இலங்கையில் ஏற்படும் மொத்த மரணங்களில் 83% வரை சிக்கலான நோய்கள் அல்லாத, ஆனால் நீடித்த சுகாதாரப் பிரச்சனைகளான உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இதய நோய் போன்றவைகளால் ஏற்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளனர்.

வரி பற்றி அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகும் இலங்கை அரசு

வரி பற்றி அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகும் இலங்கை அரசு

உள்ளூராட்சி தேர்தல் செலவின ஒழுங்கு முறைச் சட்டம் தொடர்பாக விழிப்புணர்வு செயலமர்வு

உள்ளூராட்சி தேர்தல் செலவின ஒழுங்கு முறைச் சட்டம் தொடர்பாக விழிப்புணர்வு செயலமர்வு

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW