நீதிமன்ற ஆவண அறையில் இருந்து ஹெரோயின் போதைப்பொருள் களவு

CID - Sri Lanka Police Colombo Supreme Court of Sri Lanka Law and Order
By Dharu Aug 29, 2024 09:25 AM GMT
Dharu

Dharu

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் ஆவண அறையில் இருந்து 12 கிலோ ஹெரோயின் போதைப்பொருளை மோசடி செய்ததாகக் கூறப்படும் சந்தேகநபரை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் திலின கமகே குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பில் நேற்று (28) இடம்பெற்ற வழக்கு விசாரணையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டள்ளது.

இந்த போதைப்பொருள் கையிருப்பு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றிற்காக தாக்கல் செய்யப்பட இருந்ததாகவும், இதற்கு முன்னர் போதைப்பொருள் கையிருப்பு இரசாயனப் பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டு மீண்டும் களஞ்சிய அறையில் வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வழக்கு நாள்

போதைப்பொருள் கையிருப்பில் இருந்த நிலையில், கடந்த வழக்கு நாள் அன்று களஞ்சிய அறைக்கு வந்த நபர் ஒருவர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரி என்றும், போதைப்பொருள் கையிருப்பை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் வழக்கு அறையின் பாதுகாவலரிடம் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற ஆவண அறையில் இருந்து ஹெரோயின் போதைப்பொருள் களவு | Heroin Was Stolen From The Docket Room Court

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு எடுத்துச் செல்வதாக பொய் கூறி போதைப்பொருள் கையிருப்பை எடுத்துச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், போதைப்பொருள் கையிருப்பை மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குக் கொண்டு செல்ல நீதிமன்றம் உத்தரவு எதனையும் பிறப்பிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW