தினேஷ் குணவர்தனவை ஏற்றிச் சென்ற ஹெலிகொப்டரில் கோளாறு
மறைந்த முன்னாள் அமைச்சர் ரொனி டி மெல்லின் இறுதிச் சடங்கில் அதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் பிரதமர் தினேஷ் குணவர்தனவை ஏற்றிச் சென்ற ஹெலிகொப்டர் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விடுதியொன்றின் கூரை மற்றும் உணவு பானங்கள் பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.
மாத்தறை கோட்டை மைதானத்தில் நேற்று (01) மாலை தரையிறங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததபோது குறித்த அனர்த்தம் ஏற்ப்பட்டுள்ளது.
ஹெலி தரையிறக்கப்பட்ட போது மாத்தறை விடுதியில் உணவு, பானங்கள் பெற்றுக் கொண்டிருந்த முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு அதிகாரிகள், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் உணவு பாத்திரங்கள் மீது மணல், தூசி, குப்பைகள் விழுந்து பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள் எதிர்ப்பு
அத்தோடு, மாத்தறை விடுதியின் பஃபே சாப்பாட்டு மேசையில் இருந்த அனைத்து உணவுகளிலும் மணல் விசிறி எறியப்பட்டதன் காரணமாக அவற்றை ஒதுக்க வேண்டியேற்பட்டுள்ளது விமானம் சரியாக தரையிறங்காமல் தடுமாற்றமடைந்தது குறித்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த விடுதியின் ஓடுகள் மற்றும் கூரைத் தகடுகள் அனைத்தும் காற்றின் வேகத்தில் சரிந்து விழுந்ததுடன், முகாமையாளரின் கார் மீது ஓடு விழுந்து சிறு சேதம் ஏற்பட்டுள்ளது.
அத்தோடு, அருகில் நின்றிருந்த மரமொன்றின் கிளையும் ஒடிந்து வீழ்ந்துள்ளது.
சிறிது நேர பிரயத்தனத்தின் பின்னர், விமானத்தில் இருந்து பத்திரமாக தரையிறங்கிய பிரதமர் தினேஷ் குணவர்த இறுதி சடங்கிற்கு பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில். இந்த சம்பவத்தினால் மாத்தறை விடுதிக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் ஆராய்வதற்காக மாத்தறை விடுதிக்கு பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று ஏற்பாடுசெய்யப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.