நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை

Sri Lanka Weather
By Raghav Jul 20, 2025 05:02 AM GMT
Raghav

Raghav

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (20) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகளவான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு

பலத்த காற்று 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் மணிக்கு 50-60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை | Heavy Rains In Many Parts Of The Country

நாட்டின் ஏனைய பகுதிகளில் மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் பலத்த ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய அபாயத்தைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

நள்ளிரவில் அமெரிக்காவை உலுக்கிய கோர விபத்து: பலர் படுகாயம்

நள்ளிரவில் அமெரிக்காவை உலுக்கிய கோர விபத்து: பலர் படுகாயம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW