நாட்டு மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

Ampara Batticaloa Sri Lanka Climate Change Weather
By Laksi Sep 27, 2024 04:06 PM GMT
Laksi

Laksi

நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் உருவாகிய கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக இன்றிலிருந்து (27 ) அடுத்த சில நாட்களில் மழை அதிகரிக்கக் கூடிய வாய்ப்பு காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்  எதிர்வு கூறியுள்ளது.

இலங்கையின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிய பதில் பொலிஸ் மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்

புதிய பதில் பொலிஸ் மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்

பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

தென் மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டு மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை | Heavy Rain In Country Warning Meteorology

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

பொதுத் தேர்தலில் தனி கட்சியில் களமிறங்கும் நஸீர் அஹமட்..!

பொதுத் தேர்தலில் தனி கட்சியில் களமிறங்கும் நஸீர் அஹமட்..!

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW