இலங்கை மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
வடமேல் மாகாணம், கம்பஹா, கொழும்பு, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் வெப்ப எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இந்த இடங்களில் வெப்பம், மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை 'எச்சரிக்கை' நிலை வரை அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக இயற்கை அபாய முன்னெச்சரிக்கை மையம் வெளியிட்டுள்ள வெப்பச் சுட்டெண் ஆலோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, வளிமண்டலவியல் திணைக்களத்தின் கூற்றுப்படி, 39-45 செல்சியஸ் வெப்பநிலை எச்சரிக்கை நிலையாகக் கருதப்படுவதால் மக்கள் அதிகளவு நீரை அருந்தவேண்டும் என கூறப்பட்டுள்ளது.
வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
அத்துடன், வேலை செய்யும் இடங்களில் முடிந்தவரை அடிக்கடி நிழலில் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, வெப்ப அலைகளின் போது மக்கள் இலகுரக மற்றும் வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |