உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்ற உத்தரவு
2023 உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க கோரி, ஓய்வுபெற்ற இராணுவ கேணல் டபிள்யூ.எம்.ஆர் விஜேசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இதன்படி எஸ்.துரைராஜா, ஏ.எச்.எம்.டி.நவாஸ் மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்றம் அமர்வு, இந்த விசாரணையை செப்டம்பர் 4 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு
இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் முன்னிலையாக சட்டத்தரணி சாலிய பீரிஸ், மாவட்டத் தேர்தல் மூலம் வெளியிடப்பட்ட வர்த்தமானியின் படி தமது வாடிக்கையாளர்கள், உள்ளூராட்சி தேர்தலுக்கான திகதியை இன்னும் முடிவு செய்யவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் திறைசேரி நிதியை கிடைத்த பின்னரே தேர்தல் திகதி அறிவிக்கப்படும்
என்றும் சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.