வாய்த்தர்க்கம்: மரக்கட்டையால் தாக்கித் தந்தையை கொன்ற தனயன்
Sri Lanka Police
Sri Lanka
By Nafeel
கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் தந்தைக்கும், மகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோசமடைந்ததை அடுத்து மகன் மரக்கட்டையைக் கொண்டு தாக்கியதில் தந்தை உயிரிழந்துள்ளதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் பி ராமசாமி (66) என்ற முதியவரே உயிரிழந்தார்.
வீட்டில் மகனுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து சந்தேக நபர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக 25 வயதான மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.