அரபு தேசமாக ஜொலிக்கும் காத்தான்குடி!
கிழக்கு மாகாணம் - காத்தான்குடியில் பேரீச்சம்பழ அறுவடையை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆரம்பித்து வைத்தார்.
பெரிய காத்தான்குடியில் அழகுபடுத்தும் (Beautification) நோக்கில் நடப்பட்ட பேரீச்சம்பழ மரங்களின் இவ்வருட அறுவடை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்போது, முதலாவது அறுவடையை காத்தான்குடி நகரசபை செயலாளரிடம் இருந்து ஆளுநர் பெற்றுக் கொண்டார்.
இறைவனின் அருளால் விளைச்சல் சிறப்பாக உள்ளதாகவும், அவை பள்ளிவாசல்களுக்கு விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் அவர் இதன்போது தெரிவித்தார்.
மக்கள் மத்தியில் வியப்பு
இதேவேளை பனை வகையைச் சேர்ந்த ஒரு மரத்தில் காய்க்கும் பேரீச்சம்பழம் அரபு தேசங்களில் மட்டுமே விளைகின்றன.
இதுவரையில் எகிப்து,சவுதி அரேபியா,ஈரான்,ஐக்கிய அரபு அமீரகம் போன்ற பல அரபு தேசங்களில் மட்டுமே பெருமளவில் அறுவடை செய்யப்படும் பேரீச்சம்பழம் இலங்கையின் காத்தான்குடி பகுதியில் செழித்து வளர்ந்துள்ளது.
அழகுபடுத்தும் (Beautification) நோக்கில் நடப்பட்ட பேரீச்சம்பழ மரங்களில் செய்யப்பட்ட முதல் அறுவடையே மக்கள் மத்தியில் வியப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கொத்து கொத்தாக அறுவடை செய்யப்பட்ட இந்த பேரீச்சம் பழங்களால் காத்தான்குடி, அரபு தேசமாக ஜொலிப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.