சம்மாந்துறையில் பாவனைக்கு உதவாத குளிர்பானங்கள் மீட்பு : எடுக்கப்பட்ட நடவடிக்கை

Batticaloa Sri Lankan Peoples Eastern Province Sammanthurai Public Health Inspector
By Rakshana MA Mar 25, 2025 10:26 AM GMT
Rakshana MA

Rakshana MA

சம்மாந்துறை(Sammanthurai) சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய எல்லைக்குட்பட்ட பகுதியில் மனித பாவனைக்கு தீங்கு விளைவிக்கும் குளிர்பானங்கள் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன், குளிர்பானங்களை வைத்திருந்த வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு 20 ஆயிரம் தண்டப்பணம் அறவிடப்பட்டதுமின்றி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரியின் ஆலோசனையின் பேரில் கைப்பற்றப்பட்ட குளிர்பானங்கள் அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

குறுகிய காலத்தில் மஹாபொல உதவித்தொகையை வழங்க நடவடிக்கை!

குறுகிய காலத்தில் மஹாபொல உதவித்தொகையை வழங்க நடவடிக்கை!

நடவடிக்கை

அரச பகுப்பாய்வு திணைக்களத்தின் குளிர்பானம் தொடர்பான அறிக்கையில், அனுமதிக்கப்படாத நிறமூட்டியினையும்(Tartrazine - INS 102), அனுமதிக்கப்படாத பாதுகாக்கும் இரசாயனத்தையும்(Benzoic acid) கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

சம்மாந்துறையில் பாவனைக்கு உதவாத குளிர்பானங்கள் மீட்பு : எடுக்கப்பட்ட நடவடிக்கை | Harmful Soft Drinks Seized In Sammanthurai

இதனையடுத்து, சம்மாந்துறை நீதவான் முன்னிலையில் குளிர்பானத்தை விற்பனை செய்த கடை உரிமையாளரையும் அதனை உற்பத்தி செய்தவரையும் முன்னிலைப்படுத்திய போது, இருவருக்கும் எதிராக ரூபா 20 ஆயிரம் தண்டப்பணம் அறவிடப்பட்டதுமின்றி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

அம்பாறை மாவட்ட செயலகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு

அம்பாறை மாவட்ட செயலகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு

தொடருந்தை இயக்க மறுத்து அடம்பிடித்த ஓட்டுநர்..! உணவுப் பொதியால் ஏற்பட்ட பிரச்சினை

தொடருந்தை இயக்க மறுத்து அடம்பிடித்த ஓட்டுநர்..! உணவுப் பொதியால் ஏற்பட்ட பிரச்சினை

         நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW