வாக்குப்பதிவினை மேற்கொண்ட ஹரீஸ் எம்.பி

Ampara Eastern Province Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 21, 2024 09:56 AM GMT
Laksi

Laksi

நாடளாவிய ரீதியில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (21) காலை 7 மணி முதல் இடம்பெற்று வருகின்றது.

இந்தநிலையில், அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் முன்னாள் கல்முனை மாநகர பிரதி முதல்வரும்,ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளருமான ரஹ்மத் மன்சூர் ஆகியோர் தமது வாக்கினை கல்முனை அல்- ஸூஹரா வித்தியாலயத்தில் இன்று பதிவு செய்துள்ளனர்.

நாட்டில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் வெளியான தகவல்

நாட்டில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் வெளியான தகவல்

வாக்களிப்பு 

9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் அம்பாறை மாவட்டத்தில் சுமூகமாக இடம்பெற்று வருகின்றது.

வாக்குப்பதிவினை மேற்கொண்ட ஹரீஸ் எம்.பி | Haris Rahmat Mansoor Voting In Kalmunai

இதற்கமைய, திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் அம்பாறை ,பொத்துவில் , சம்மாந்துறை ,கல்முனை,ஆகிய தேர்தல் தொகுதிகளில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

2024 ஜனாதிபதி தேர்தல்: பதிவான மொத்த வாக்கு வீதம்

2024 ஜனாதிபதி தேர்தல்: பதிவான மொத்த வாக்கு வீதம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW