கட்சி உறுப்புரிமையை இழக்கும் இரண்டு அமைச்சர்கள்
Manusha Nanayakkara
Sri Lanka Politician
Harin Fernando
By Kamal
ஆளும் கட்சியின் முக்கிய அமைச்சுப் பதவிகளை வகித்து வரும் ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இருவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டியவர்கள்.
எவ்வாறெனினும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இருவரும் இணைந்து கொண்டனர்.
இதன் காரணமாக குறித்த இருவரையும் கட்சியிலிருந்து நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.