ஹரின் பெர்ணான்டோவுக்கு வழங்கப்பட்டுள்ள புதிய பதவி
Harin Fernando
UNP
By Independent Writer
முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு உடன் நடைமறைக்கு வரும் வகையில் முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, அரசியல் அணிதிரட்டலுக்கான பிரதிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விடயத்தை ஐக்கிய தேசிய கட்சி உத்தியோகபூர்வமாக அறிவித்தள்ளது.
பொதுவான நிகழ்ச்சி நிரல்
முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு வழங்கப்பட்ட பதவியின் பொறுப்பு, நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து, அவற்றை ஒரு பொதுவான நிகழ்ச்சி நிரலில் ஈடுபடுத்துவதாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக, ஐக்கிய தேசியக் கட்சி ஏற்பாடு செய்யும் 1,000 கூட்டங்களுக்கும் ஹரின் பெர்னாண்டோவே பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.