40 இலட்சம் நிதியில் சம்மாந்துறையில் சிறுவர் பராமரிப்பு மையம்
அம்பாறை - சம்மாந்துறையில்(Sammanthurai) இயங்கும் முஸ்லிம் சிறுவர் பராமரிப்பு மையத்திற்கு புதிய கட்டிடம் ஒன்று நிர்மாணிக்கப்படுகின்றது.
குறித்த கட்டிட நிர்மாணிப்பானது, சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் டீ- 100 திட்டத்தின் கீழ், 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், குறித்த கட்டிடத்தினை சட்டத்தரணி ஹரீஸ் நேரில் விஜயம் செய்து பார்வையிட்டுள்ளார்.
சிறுவர் பராமரிப்பு மையம்
இதன்போது சம்மாந்துறை அஸ்-ஸலாம் சிறுவர் அபிவிருத்தி மையத்தை வழி நடத்தும் பெண்கள் நட்புறவு சமூக சேவைகள் அமைப்பின் நிர்வாகிகளையும், நிலையத்தின் முகாமையாளரையும் சந்தித்து சிறுவர் அபிவிருத்தி மையத்தின் அபிவிருத்திப் பணிகள், கல்வி மேம்பாட்டு விடயங்களை பற்றி கலந்துரையாடியுள்ளனர்.
மேலும் அங்கு வாழ்ந்து வரும் சிறுவர்களை சந்தித்து அவர்களின் தேவைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டுள்ளார்.
சிறுவர் அபிவிருத்தி மையத்தின் தேவைகளை நிவர்த்திக்க நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கிய ஒத்துழைப்புக்கும், தொடர்ச்சியான சேவைகளுக்கும் நிர்வாகத்தினர் நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





