ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய தலைவரான இஸ்மாயில் ஹனியா கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்
ஹமாஸ் ( Hamas) இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் அந்த அமைப்பின் அரசியல்பிரிவு தலைவருமான இஸ்மாயில் ஹனியா கொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவமானது நேற்று (30) ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, இந்த தாக்குதலில் ஹனியா மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் ஆகியோரே உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு உறுதி செய்துள்ளது.
ஹனியா கொலை
இதனையடுத்து ஹமாஸ் அமைப்பு இன்று (31) வெளியிட்ட அறிக்கையில், தெஹ்ரானில் உள்ள அவரது இல்லத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹனியா கொல்லப்பட்டுள்ளார்.
புதிய ஈரானிய ஜனாதிபதி மசூத் பிசாக்கியானின் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பின்னர் ஹனியா இறந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்ரேலிய இராணுவத்தினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும் இந்த தாக்குதல் தொடர்பில் இஸ்ரேலிய அரசாங்கம் எவ்வித தகவல்களையும் இதுவரையில் வெளியிடவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாம் எதிர்க்கட்சியில் இருக்கின்றோம் என்ற எண்ணத்துடன் காலத்தை கழிப்பது மக்களுக்கு செய்யும் துரோகம் : ஹரீஸ் எம்.பி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |