கல்முனை பிராந்திய தொற்று நோய் தடுப்பு பிரிவிற்கு மருந்து விசிறும் இயந்திரம் கையளிப்பு
உலக வங்கியின் நிதி உதவியின் மூலம் ஆரம்ப சுகாதார பராமரிப்பு முறைமையை வலுப்படுத்தும் (PSSP) திட்டத்தின் ஊடாக கல்முனை பிராந்திய சுகாதார நிறுவனங்களுக்கு தளபாடங்கள், மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் பிராந்திய தொற்று நோய் தடுப்பு பிரிவின் கீழ் உள்ள பூச்சியல் ஆய்வு கூடத்தில் அவசியத் தேவையாகக் காணப்பட்ட மருந்து விசிறும் இயந்திரம் நேற்று (17) அந்தப் பிரிவிற்கு வழங்கி வைக்கப்பட்டது.
பிராந்திய சுகாதார சேவைகள்
குறித்த இயந்திரங்களை வழங்கும் நிகழ்வு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சகீலா இஸ்ஸடீன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது பிராந்திய தொற்று நோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.ஏ.சீ.எம்.பஸால் பணிப்பாளரிடமிருந்து குறித்த இயந்திரத்தினைப் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.சீ.எம்.மாஹிர், பிராந்திய திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி ஏ.ஏ.எஸ்.எம்.எஸ்.ஷாபி, உயிரியல் மருத்துவ பொறியியலாளர் என்.எம்.இப்ஹாம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |