கொழும்பு - காலிமுகத்திடலில் ஹஜ் பெருநாள் சிறப்பு தொழுகை
Eid-al-Adha
Hijra - Islamic New Year
Colombo
By Fathima
கொழும்பு - காலிமுகத்திடல் பகுதியில் ஹஜ் பெருநாள் சிறப்பு தொழுகை இடம்பெற்று வருகிறது.
இதில் ஏராளமான முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
உலகளாவிய ரீதியாக இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகின்ற இரு பண்டிகைகளில் ஒன்றே ஈதுல் அல்ஹா எனப்படும் புனித ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும்.
இறை தூதர்களில் ஒருவரான இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவு கூரும் விதமாக, இஸ்லாமிய நாட்காட்டியின் பிரகாரம் துல் ஹஜ் மாதம் பிறை 10இல் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய தினம் ஹஜ் பெருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் தமிழ்வின் தளத்தின் வாழ்த்துக்கள்.





