பொருளாதார நெருக்கடி நீங்க முஸ்லிம்களாகிய நாங்கள் பிரார்த்திப்போம்!இம்ரான் மஹ்ரூப் வாழ்த்து
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நீங்கவும் மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழல் ஏற்படவும் முஸ்லிம்களாகிய நாங்கள் தியாகம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு பிரார்த்திப்போம் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
ஒவ்வொரு வருடமும் நாம் கொண்டாடும் ஹஜ் பெருநாளானது எமக்கு பல விடயங்களை போதித்துச் செல்கிறது. இறைத்தூதர் இப்றாஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஏக இறைவனுக்கு எதையும் இணைவைத்து விடக்கூடாது என்பதற்காக பட்ட கஷ்டங்களை நாம் வாழ்வில் ஒரு கணமேனும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நபி இப்றாஹிம் (அலை) அன்னை ஹாஜரா நாயகி மற்றும் மகன் இஸ்மாஈல் (அலை) ஆகியோரின் தியாகம் அர்ப்பணிப்பையே தியாகத்திருநாள் எமக்கு உணர்த்தி வருகிறது. அவர்களின் தியாகம், அர்ப்பணிப்பு எமது வாழ்விலும் ஏற்படுத்திக்கொள்ளவே ஒவ்வொரு வருடமும் மக்கமா நகருக்கு சென்று ஹஜ் கடமையை நிறைவேற்றி வருகிறோம்.
முஸ்லிம்களாகிய நாங்கள் எப்போதும் அர்பணிப்புக்கு தயாரானவர்கள். அதனால் நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் கஷ்டப்படும் எமது சகோரர்களுக்கு எம்மால் முடிந்த தியாகம், அர்ப்பணிப்பை செய்ய இந்த நாளில் உறுதிபூணுவோம் அத்துடன் நாட்டின் பொருளாதாம் சீரடைந்து மக்கள் நிம்பதியாக வாழ இந்நாளில் அனைவரும் பிராத்திப்போம்.
உலகெலாம் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடும் இஸ்லாமிய
பெருமக்களுக்கு எனது இனிய ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.