துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி! இரு சிறுவர்கள் படுகாயம்

Sri Lanka Police Shooting Sri Lanka Police Investigation
By Fathima Apr 15, 2023 12:25 AM GMT

அஹுங்கல்ல மித்தரமுல்ல பிரதேசத்தில்  இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 29 வயதுடைய இளைஞர் ஒருவர்  உயிரிழந்துள்ளார்.

இத்துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நேற்று (14) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. 

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளந்தெரியாத இருவர், மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி! இரு சிறுவர்கள் படுகாயம் | Gun Shooting Sri Lanka

இரு சிறுவர்கள் வைத்தியசாலையில்

இளைஞர் சுடப்பட்டதை அடுத்து மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகவும் அதில் பயணித்த இரண்டு சிறுவர்களும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர். 

இத்துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.