மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு முன் துப்பாக்கிச்சூடு : இருவர் பலி

Mannar Sri Lankan Peoples Crime
By Rakshana MA Jan 16, 2025 05:57 AM GMT
Rakshana MA

Rakshana MA

புதிய இணைப்பு

மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

வழக்கொன்றுக்காக நீதிமன்றத்திற்கு வருகை தந்தவர்களை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதன்போது, மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் உள்ளிட்ட நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியாசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதன்போது, வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் படுகாயமடைந்த இரு ஆண்கள் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.


கொழும்பில் இன்று 12 மணி நேர நீர் விநியோகத்தடை

கொழும்பில் இன்று 12 மணி நேர நீர் விநியோகத்தடை

முதலாம் இணைப்பு

மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக சற்று முன்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திகமனதுங்க தெரிவித்துள்ளார்.

யாழில் கரையொதுங்கியுள்ள மர்ம வீடு : குவியும் மக்கள்

யாழில் கரையொதுங்கியுள்ள மர்ம வீடு : குவியும் மக்கள்

வைத்தியசாலையில் அனுமதி

இதன் போது வழக்கு அலுவல் ஒன்றுக்காக நீதிமன்றத்துக்கு வருகை தந்த மூவர் துப்பாக்கிச் சூடுபட்டு படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்த மூவர் ஆபத்தான நிலையில் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு முன் துப்பாக்கிச்சூடு : இருவர் பலி | Gun Shooting In Front Of The Mannar Court

இந்நிலையில், சம்பவம் குறித்து மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்றைய நாளுக்கான வானிலை மாற்றம்

இன்றைய நாளுக்கான வானிலை மாற்றம்

சட்டவிரோத பொருட்களை விற்க முயன்ற பாடசாலை மாணவன் உட்பட நால்வர் கைது

சட்டவிரோத பொருட்களை விற்க முயன்ற பாடசாலை மாணவன் உட்பட நால்வர் கைது

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


Gallery