தப்பிச் செல்ல முயன்ற நபர் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு
Sri Lanka Police
Kegalle
Hospitals in Sri Lanka
By Fathima
பொலிஸாரின் உத்தரவை பொருட்படுத்தாமல் தப்பி செல்ல முயன்ற மோட்டார் சைக்கிள் சாரதி ஒருவர் மீது பொலிஸாரால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவமானது இன்று (14.06.2023) றம்புக்கணை- போலகம, கொட்டகம சந்தியில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிள் சாரதியின் இடது பாதம் மற்றும் இடது கையில் துப்பாக்கி சன்னங்கள் பாய்ந்துள்ளது.
பொலிஸார் விசாரணை
இதனையடுத்து துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த சந்தேகநபரை கேகாலை மருத்துவமனையில் சிகிச்சைக்காக பொலிஸார் அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில் சந்கேதநபர் றம்புக்கணை பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும், தப்பி செல்ல முயன்றதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.