14 வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்
Sri Lanka Police Investigation
Death
Gun Shooting
By Fathima
மட்டக்களப்பில் வேட்டைக்காக கொண்டு செல்லப்பட்ட துப்பாக்கி வெடித்ததில் 14 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் வாகரை வனப்பகுதியில் நேற்று (28.06.2023) இடம்பெற்றுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த சிறுவன் தனது உறவினர்களுடன் வேட்டையாட சென்ற போது அவர்கள் வைத்திருந்த துப்பாக்கி வெடித்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மூன்று இளைஞர்கள் கைது
உயிரிழந்த சிறுவனுடன் வேட்டையாட சென்ற 24, 28 மற்றும் 32 வயதுடைய மூன்று இளைஞர்கள் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.