பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி

By Chandramathi Mar 27, 2024 02:09 AM GMT

நாரம்மல பிரதேசத்தில் கொள்ளையடிப்பதற்காக சென்ற மூவரில் ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

ஆப்பிள் ரக கையடக்கத் தொலைபேசிகளை விற்பனை செய்வதாக நாளிதழ்களில் விளம்பரம் செய்து கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்ய வந்தவர்களிடம் கொள்ளையர்கள் பணத்தை திருட முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி | Gun Shoot In Narambala

போலி விளம்பரம்

அந்த விளம்பரத்திற்கு அமைய, ருவன்வெல்ல பிரதேசத்தில் இருந்து கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்ய சென்ற இருவர் சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் அவர்களை சந்திக்க சென்றுள்ளனர்.

இதன்போது கொள்ளையர்கள் கூரிய ஆயுதங்களால் தொலைபேசி வாங்க சென்றவர்களின் மோட்டார் வாகனத்தை தாக்கியுள்ளனர்.

மேலதிக விசாரணை

இதனால் கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்ய வந்த இருவர், கொள்ளையர்களின் தாக்குதலால் காயமடைந்து குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி | Gun Shoot In Narambala

இதனையடுத்து ​​பொலிஸ் அதிகாரிகள் கொள்ளையர்கள் மீது நடத்திய துப்பாக்கி சூட்டிலிருந்து இரண்டு கொள்ளையர்கள் தப்பியோடியதுடன், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்றுமொரு கொள்ளையர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாரம்மல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.