கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
கொழும்பு - தலங்கம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் இன்று (25.08.2023) காலை தலங்கம, ரொபர்ட் குணவர்தன மாவத்தையில் நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
மேலதிக விசாரணை
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் கோரம்பே பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்
இந்நிலையில் படுகாயமடைந்த நபர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச்சூட்டை நடத்தியவரும் அவருடைய நண்பர்களும் குறித்த பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.