புதிய கலீபத்துல் குலபாவிற்கு ஸ்ரீலங்கா ஷரீஆ கவுன்சில் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தி

Sri Lanka Sri Lankan Peoples
By Fathima Apr 20, 2023 12:06 AM GMT

எமது நாட்டில் தலைசிறந்த சன்மார்க்க அறிஞர்களில் ஒருவரான மௌலவி ஸுஹ்ர் முஹம்மது (பாரி) ஆலிம் அண்மையில் கலீபத்துல் குலபாவாக நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நியமனம், உலக அல் ஃபாஸிய்யதுஷ் ஷாதுலிய்யா தரீக்காவின் ஆன்மீகத் தலைவர் சங்கைக்குரிய ஷெய்குஸ் ஸஜ்ஜாதா முஹம்மத் மஹ்தி அப்துல்லாஹ் அல் பாஸி அல் மக்கி அஷ் ஷாதுலி அவர்களால் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மௌலவி ஸுஹ்ர் முஹம்மது (பாரி) ஆலிமின் ஆன்மீக பயணம் தொடரட்டும் என ஸ்ரீலங்கா ஷரீஆ கவுன்சில் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கலீபத்துல் குலபாவிற்கு ஸ்ரீலங்கா ஷரீஆ கவுன்சில் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தி | Gulaba Spiritual Journey Sri Lanka Sharia Council

வாழ்த்து செய்தி

இந்த வாழ்த்து செய்தியை,ஸ்ரீலங்கா ஷரீஆ கவுன்சிலின் பொதுச் செயலாளர் எம். பி. எம் ஹிஷாம் (ஃபத்தாஹி) அனுப்பியுள்ளார்.

அரபு, தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளிலும் புலமையும், ஷரீஆ துறையில் நிபுணத்துவமும் பெற்றிருக்கும் மிகப்பெரிய ஆளுமையான இவர், இவ்வுயரிய பதவிக்கு நியமிக்கப்பட்டிருப்பது சாலப் பொருத்தமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா ஷரீஆ கவுன்சிலின் உப தலைவர்களில் ஒருவரான இவர் கடந்த பல தசாப்தங்களாக ஷாதுலிய்யா தரீக்காவின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாது அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் அகீதாவைப் பாதுகாக்கவும் மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.