உலகளவில் சாதனைப்படைத்த இலங்கை வைத்தியர்கள்
Sri Lanka
Kidney Disease
Guinness World Records
By Fathima
சத்திரசிகிச்சை மூலம் உலகிலேயே மிகப்பெரிய சிறுநீரகக் கல்லை இலங்கை வைத்தியர்கள் அகற்றி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
கடந்த (01.06.2023) கொழும்பு இராணுவ வைத்தியசாலையிலேயே இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட கல் 13.372 சென்றிமீற்றர் நீளமும் 801 கிராம் எடையும் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்குமுன் கின்னஸ் உலக சாதனைகளின்படி, உலகில் இரண்டு மிகப்பெரிய சிறுநீரகக் கற்கள் அடையாளம் காணப்பட்டிருந்தன.